அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகர் ஜாக்கி ஷெராப் மும்பையில் உள்ள கோவிலைச் சுத்தம் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
ஶ்ரீராமரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்திய நடிகர் ஜாக்கி ஷெராப் மும்பையில் உள்ள ஒரு பழமையான கோவிலைச் சுத்தம் செய்தார். 66 வயதாகும் அவர் கோவில் தனது முழு கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் தூய்மை வேலையைச் செய்தார்.
இவர் கோவிலில் உள்ள சிலைகள், கோவில் தளங்கள் மற்றும் படிக்கட்டுகளைச் சுத்தம் செய்தார். இதனைக் காண அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
இவருக்கு இந்த மாத தொடக்கத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.