நடிகை யாமி கெளதம் நடித்துள்ள ‘ஆர்டிகல் 370’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை யாமி கெளதம் நடித்துள்ள “ஆர்டிகல் 370” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை இரண்டு முறை தேசிய விருது வென்ற இயக்குனர் ஆதித்ய சுஹாஸ் ஜம்பலே இயக்கியுள்ளார்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ பி 62 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை யாமி கெளதம் ஒரு உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டர் இவர் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உளவுத்துறை ஏஜென்ட் உடை அணிந்து காணப்படுகிறார்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 370 – ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கக் கூடிய பிரிவு இது ஆகஸ்ட் 5ஆம் தேதி 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.