தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை, 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, இன்று அதிகாலை பிரேசிலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.