அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : வண்ண மலர்கள் தூவி வழிபாடு!
Oct 17, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : வண்ண மலர்கள் தூவி வழிபாடு!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார்.

தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஒன்றிணைகின்றன. இப்பகுதி அரிச்சல் முனை என்று அழைக்கப்படுகிறது

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தமும், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சேது (கடல்) தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாகும். மேலும் அரிச்சல் முனை இராமர் சீதையுடன் முதலில் கால் வைத்த பூமி எனவும் கூறப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இங்கு புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும்  வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில்  தங்கிய பிரதமர் மோடி இன்று காலை அரிச்சல்முனை சென்றார். கூடைகளில் இருந்த பல வண்ண பூக்களை கடற்கரையில் வைத்து பூஜை செய்த பிரதமர், அங்கு கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த 11 நாட்களாக விரதம் கடைபிடித்து வரும் பிரதமர் மோடி, அரிச்சல் முனையில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்கிறார். மேலும் அங்கு உள்ள புனித தூணிற்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார்.

இதனைத்தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.  பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி  செல்கிறார். அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Tags: Dhanushkodiarichal munaiGothandaramar templerameswaramRamar Templeprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியப் பெருடங்கலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies