பிரேசில் நாட்டில் இன்று அதிகாலை, 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு பிரேசில் பகுதியில் இன்று அதிகாலை 3.01 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 614 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது, பிரேசிலின் தாரௌகாவில் இருந்து வடமேற்கே123 கிலோமீட்டர் தொலைவில், 628.8 கிலோமீட்டர் ஆழத்தில், 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
தாரௌகாவின் வடமேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில், நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.