மாநில தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மாநில தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வடகிழக்கு மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைய பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
On Manipur’s Statehood Day, my best wishes to the people of the state. Manipur has made a strong contribution to India’s progress. We take pride in the culture and traditions of the state. I pray for the continued development of Manipur.
— Narendra Modi (@narendramodi) January 21, 2024
“மணிப்பூர் மாநில தினத்தில், அம்மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மணிப்பூர் வலுவான பங்களிப்பைச் செய்துள்ளது. மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் நாம் பெருமை கொள்கிறோம். மணிப்பூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.