இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம், நேற்று இரவு ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதக்ஷான் மாகாணத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக, தலிபான்கள் நியமித்த தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதி செய்துள்ளார். விமானம் பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.