தி.மு.க., ஆட்சியில் திறமையற்ற, ஊழல், பொய்யர் கூட்டமான அமைச்சர்கள் உள்ளனர் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
The DMK Government has ministers who are inefficient, corrupt and a bunch of liars.
Below are the screenshots of instructions passed on by ADGP L&O to his SPs instructing to obstruct the celebration of the Pran Pratishtha across TN.
TN has become a draconian state under the… pic.twitter.com/lvvcszIWJI
— K.Annamalai (@annamalai_k) January 21, 2024
தி.மு.க., ஆட்சியில் திறமையற்ற, ஊழல், பொய்யர் கூட்டம் என அமைச்சர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பிரான் பிரதிஷ்டை கொண்டாடப்படுவதைத் தடுக்குமாறு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தனது எஸ்பிகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் உள்ளன.
தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு ஒரு கொடூரமான மாநிலமாக மாறிவிட்டது, மு.க. ஸ்டாலின் செயல்கள், கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலினின் செயல்களுக்கு இணையான செயல்களாக உள்ளது.
என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறும், தமிழக அரசுக்கு சவால் விடுகிறேன், மேலும் இது குறித்து முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.