தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்.
தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 19.90 கோடி ரூபாய் செலவில் புதிதாக தேசிய திறன் பயிற்சி நிறுவனம் கட்டப்பட்டது. இந்த நிறுவனம், பல்வேறு துறைகளில் பெண்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால திறன் படிப்புகளை வழங்கும்.
இந்த நிலையில், இந்த தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்தி நிகழ்ச்சியில் பேசிய கிஷன் ரெட்டி, “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மத்திய அரசின் முக்கியப் பணியாகும்.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏராளமான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பேட்டி பச்சாவோ பேட்டி பதவ் மற்றும் பிரதமர் உஜ்வாலா போன்ற முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.
முடிவெடுக்கும் சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான பெண்களுக்கு, அவர்களின் வாய்ப்புகளை அதிகரிக்க உதவுவதற்காக வேறு பல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார். நிகழ்ச்சியில், சாய்னா நேவால், சுனிதா கிருஷ்ணன் போன்ற பெண் சாதனையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.