சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. லியாங்ஷுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 47 பேர் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மண்ணுக்குள் புதையுண்ட 47 பேரும், 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்களுள் புதைந்தவர்களில் இருவரின் உடல் சடலமக மீட்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வருகிறது.