அயோத்தி ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று பஜனையில் ஈடுபட்டனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய விருந்தினர்கள், ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் முன்னிலையில், அயோத்தியில் ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த நிலையில், ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலில் ராமர் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமர் படத்தைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று ராமர் குறித்து பஜனை பாடினர். மேலும், கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், எராளமான பக்தர்கள் மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.