அசாமில் இன்று 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று முற்பகல் 11.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 7 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், போங்கைகான் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் உணரப்பட்டன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.