நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கம் நாளை தொடக்கம்! - குடியரசுத் துணைத் தலைவர்
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கம் நாளை தொடக்கம்! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவைக் குறிக்கும் வகையில் ‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியக் குடியரசின் 75-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில், இந்தியா முழுமைக்குமான ‘நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ என்ற ஓராண்டு கால இயக்கத்தை குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை டாக்டர் அம்பேத்கர்  சர்வதேச மையத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், நமது தேசத்தைப் பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாடு தழுவிய இந்த முன்முயற்சி, அரசியலமைப்புக் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான பெருமை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழிகளில் பங்கேற்கவும், நமது ஜனநாயகப் பயணத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது வாய்ப்பளிக்கும். இந்தப் பிரச்சாரத்தின் போது விவாதிக்கப்படவுள்ள சில தலைப்புகள் வருமாறு:-

‘அனைவருக்கும் நீதி – ஒவ்வொரு வீட்டிற்கும் நீதி’ என்னும் பொதுச் சேவை மையங்களின் கிராம அளவிலான தொழில்முனைவோர் மூலம் கிராமவாசிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘சட்ட உதவி மையங்கள்’ திட்டம் மாற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சட்ட சேவைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும்.

மாநில / யூனியன் பிரதேச அளவில், சட்ட சேவை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும், இது தனிநபர்களுக்கு வழிகாட்டுதல், தகவல் மற்றும் அரசின் பல்வேறு சட்ட மற்றும் பிற சேவைகள், திட்டங்கள் குறித்த ஆதரவைப் பெறுவதற்கான தளங்களாக செயல்படும்.

புதிய இந்தியாவின் புதிய தீர்மானம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு செயல்பாடு, ஐந்து உறுதிமொழிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்து உறுதிமொழிகள் சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் குடிமக்கள் தங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்; ஐந்து உறுதிமொழி அனுபவம் (ரீல் / வீடியோ தயாரிக்கும் போட்டி).

அரசியலமைப்புச் சட்டம் குறித்த தங்கள் அறிவை ஈடுபாட்டுடன் சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் மக்கள் பெறுவார்கள். இந்த நிகழ்ச்சிகள் மை கவ் தளத்தில் நடைபெறும்.

மூன்றாவது திட்டமான சட்ட விழிப்புணர்வு இயக்கம், சட்டக் கல்லூரிகளால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஐந்து உறுதிமொழி செய்தியை எடுத்துச் செல்ல மாணவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உரிமைகள், பொறுப்புகள் பற்றிய சட்டத் தகவல்களை மிகவும் ஈடுபாட்டுடனும், பொழுதுபோக்கு மற்றும் மறக்கமுடியாத வகையிலும் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, நியாய சேது தொடங்கப்படும். இது சட்ட சேவைகளை கடைசி மைல் வரை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சட்டத் தகவல், சட்ட ஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும். இதனால் மேலும் உள்ளடக்கிய நியாயமான சமுதாயம் உருவாகும்.

‘நீதிக்கான முழுமையான அணுகலுக்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்’ என்ற திட்டத்தின் சாதனைக் கையேடும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியத் தலைமை வழக்கறிஞர் திரு ஆர் வெங்கட்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்.

Tags: Vice president of india
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கேயில் அறிவொளி மற்றும் அமைதிக்கான நுழைவாயிலாக இருக்கட்டும்! – அதானி

Next Post

வெளிநாட்டு மருத்துவா்களுக்கான பதிவு உரிமம்: வழிகாட்டுதல் வெளியீடு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies