அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று (ஜனவரி 22-2024) பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ராமர் சிலைக்கு, பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தனது எக்ஸ் பதிவில்,
On this auspicious day, as the Ayodhya Mandir's doors open, let it be a gateway to enlightenment and peace, binding the communities with the timeless threads of Bharat's spiritual and cultural harmony. pic.twitter.com/3MzcKiI8GG
— Gautam Adani (@gautam_adani) January 22, 2024
இந்த புனித நாளில், அயோத்தி ராமர் கேயில் கதவுகள் திறக்கப்படுவதால், அது அறிவொளி மற்றும் அமைதிக்கான நுழைவாயிலாக இருக்கட்டும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் காலமற்ற இழைகளால் சமூகங்களை பிணைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.