ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பாக ‘ஜெய் ஸ்ரீராம் இந்தியா’ எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காவி கொடிகளுடன் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தப்பட்டது.
கனடாவில் உள்ள இந்து கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு பெருந்திரளான இந்துக்கள் குவிந்து ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடினர்.
கனடா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேசியா, தைவான், மெக்சிகோ, கென்யா உள்ளிட்ட நாடுகளிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை இந்துக்கள் கொண்டாடினர்.
உலகம் முழுவதும் டிவி சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிரம்மாண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவைக் கோடிக்கணக்கான மக்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பாக ‘ஜெய் ஸ்ரீராம் இந்தியா’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/C2ZzGl9rVQT/
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்ததை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி தங்களது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை மிக்ஜாம் புயல் ஏற்பட்டுப் பெறும் அளவு சேதம் ஏற்பட்ட பொது டேவிட் வார்னர் சென்னை மக்களுக்காகப் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.