இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், முக்கிய விருந்தினர்கள், ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் முன்னிலையில், அயோத்தியில் ராமர் விக்கிரகத்தை, ஜனவரி 22-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த நிலையில், ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், இந்தியா – சைனா எல்லைப் பகுதியில் மைனஸ் டிகிரி கடும் குளிரில், இந்திய இராணுவ வீரர்கள், மனம் உருக ஸ்ரீராமஜெயம் சொல்லி மகிழ்ந்தனர். அத்துடன், சைனா வீரர்களை அழைத்து, அவர்களுக்கு ராமர் கோவிலின் சிறப்புகள் மற்றும் மகிமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், இந்திய வீரர்களுடன் சைனா வீரர்களும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.