மறைந்த, முன்னாள் பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது.
கடந்த 1924ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி, பிகார் மாநிலத்தில் பிறந்தவர் கர்பூரி தாக்கூர். இவர், மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக மக்கள் தலைவர் என அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மறைந்த, முன்னாள் பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.