இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா – புனேரி பால்டன் இரு அணிகளும் 32-32 என்ற புள்ளிகளைப் பெற்றதால் போட்டி ட்ரா ஆனது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் யு மும்பா – புனேரி பால்டன் அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டம் 32-32 என டிராவில் முடிந்தது.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி விரைவில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற்று பிளே – ஆஃப் செல்ல போராடி வருகிறது.
கடந்த போட்டியில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தி கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறியும் வருகிறது. அதே சமயம் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலே இருக்கும் மற்ற அணிகள் அதிக புள்ளிகள் பெறாமலும் இருக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டம் ட்ரா ஆனது. இது தமிழ் தலைவாஸ் உதவியாக இருக்கும்.