அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்கட்சியான குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதாவது அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் களமிறங்க ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவரே அந்த கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படுவார்.
இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹெய்லி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் 52.5 சதவிகித ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். 46.6 சதவிகித ஆதரவு பெற்று நிக்கி ஹெய்லி 2ம் இடம் பிடித்தார்.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதேபோல் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.