மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, வண்டியூர் மாரியம்மன் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
மதுரை மாநகரில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது என்பது வழக்கம் அதில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றுதான் வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா.
இத் திருவிழா அன்று மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி காலை இரண்டு முறை மற்றும் மாலை ஒரு முறை என்று தெப்பக்குளத்தை சுற்றி வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு தெப்பக்குளம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமு. இதுவரை தெப்பம் கட்டும் பணிகள் மற்றும் தெப்பக்குளத்தில் உள்ள நீராளி மண்டபத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இது காண்போரை கவரும் வண்ணம் உள்ளது. நாளை நடைபெறும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது.