மேற்கிந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி20 அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
SQUAD: Mitch Marsh takes the reigns once again as our Aussie men prepare to finish their home summer on a high 💥🏏 #AUSvWI pic.twitter.com/BV10sPDRTQ
— Cricket Australia (@CricketAus) January 24, 2024
ஆஸ்திரேலியா அணி :
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெர்ஹெண்ட்ராப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜாம்பா.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது.