மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநில அரசுப்பேருந்து ஒன்று புனேவில் இருந்து (புல்தானா) மெஹ்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பழைய மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சிந்த்கேத் ராஜா நகருக்கு அருகே நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியது. ஏற்கனவே கவிழ்ந்த கரும்பு லாரி ஒன்றில் இருந்து மற்றொரு டிரக்கில் கரும்பு ஏற்றும் பணி நடைபெற்று வந்துள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் ல் 4 பயணிகள், இரு ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.