இந்தியாவின் 75- வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற தேசிய தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் நாளை இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆம்பர் கோட்டைக்கு வருகை தந்து, ஜெய்ப்பூரில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மஹால் ஆகியவற்றை பார்வையிடுகிறார். மேலும் அவருக்கு இந்தியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை இரவு பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திக்கிறார்.
நாளை மறுநாள் இந்தியாவின் 75- வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்று அணிவகுப்பைக் காணவுள்ளார். இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக் குழுவும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.