தைப்பூச திருவிழாவையொட்டி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
அதில் , “கருவாய், உயிராய்க், கதியாய், விதியாய், குருவாய் வந்தருளும், கந்தபெருமானை வழிபடும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு, தமிழக பாஜக சார்பாக தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ, எம்பெருமான் சண்முகன் அருள்புரியட்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! “என்று தெரிவித்துள்ளார்.