19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியின் டாஸ் அப்டேட்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் இந்தியா – அயர்லாந்து ; ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று நடைபெறுகிறது.
இதில் இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியானது மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நடைபெறும் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே போட்டி கிம்பர்லியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.