இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“பாரதி” படத்தில் மயில் போலப் பொண்ணு என்று பாடி திரை இரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர், அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்ற பவதாரிணி , இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு காலமானதாக கூறப்படுகின்றது.
புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர்,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாளை விமானம் மூலம் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப் படுகின்றது. இளையராஜாவும் இலங்கையில்தான் இருக்கிறார.