இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணியின் மறைவுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகள் பாடகி பவதாரிணி. இளையராஜா இசையமைத்த பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் பவதாரிணிக்கு பெரும் புகழைச் சேர்த்தது. இப்பாடலுக்காகத் தேசிய விருதையும் பெற்றார் பவதாரிணி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பதவாரிணி நேற்று காலமானார். அவரது உடல் இன்று இலங்கையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ” என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என கூறியுள்ளார்.