இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணியின் மறைவுக்கு நடிகை சிம்ரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா.
இவரின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணம் அடைந்தார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதையடுத்து பல்வேறு திரைபிரபலங்கள் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், பவதாரிணியின் மறைவால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் ராஜா சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி ” என பதிவிட்டுள்ளார்.
Shocked and saddened by the passing away of Bhavatharini 💔Sending heartfelt condolences and prayers to Raja sir & the family during this difficult time. Om Shanti 🙏 pic.twitter.com/rwtlAmrIAY
— Simran (@SimranbaggaOffc) January 25, 2024