நாடார் மகாஜன சங்கம் சார்பாக சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தங்கள் மேலான சமூகப் பணிகளைத் தொடர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கடும் உழைப்பினால் முன்னேறி, சமுதாயத்தில் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள நாடார் பெருமக்களின் முக்கிய கூட்டமைப்பான, நாடார் மகாஜன சங்கத்தின் 72 ஆவது ஆண்டு விழா வெற்றிகரமாக நடைபெறுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi… pic.twitter.com/N2ApGTY5hB
— K.Annamalai (@annamalai_k) January 28, 2024
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, தமிழகம் எங்கும் கொண்டு செல்லும் தமிழக பாஜக சார்பாக நடைபெறும் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் இருப்பதால், விழாவில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். விழா பெரும் வெற்றியடையவும், மேலும் பல நூற்றாண்டுகள் கண்டு, சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தங்கள் மேலான சமூகப் பணிகளைத் தொடரவும் தமிழக பாஜக
சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.