டெல்லியில் உள்ள கல்காஜி கோவிலில் கீர்த்தனை மேடை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார், மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள உள்ள கல்காஜி கோயிலில் ‘கீர்த்தனை’ மேடை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 45 வயது பெண் ஒருவர் பலியானார்.
மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மாதா ஜாக்ரான், கல்காஜி கோயிலில் உள்ள மஹந்த் பரிஷரில் சனிக்கிழமை
அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சுமார் 1,500-1,600 பேர் இந்த நிகழ்வில் கூடியிருந்தனர்.
இந்த நிகழ்வின் முக்கிய மேடைக்கு அருகில், அமைப்பாளர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களின் குடும்பத்தினருக்காக, மரம் மற்றும் இரும்பு சட்டத்தால் கட்டப்பட்ட உயரமான மேடை அமைக்கப்பட்டது.
இந்த மேடை பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது. மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் தியோ தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று இரவு கல்காஜி கோயில் ஜாக்ரானின் போது நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.