சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நேசபிரபுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நியூஸ் 7 ஊடகவியலாளர், சகோதரர் நேசபிரபு அவர்களை, இன்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினோம்.
சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் @news7tamil ஊடகவியலாளர், சகோதரர் திரு. நேசபிரபு அவர்களை, இன்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினோம்.
சகோதரர் நேசபிரபு அவர்களின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி,… pic.twitter.com/pRIjDNW05E
— K.Annamalai (@annamalai_k) January 28, 2024
சகோதரர் நேசபிரபு அவர்களின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி, தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தோம்.
நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.