கடந்த ஆண்டு சீனாவில் 230-க்கும் மேற்பட்ட வீட்டு டெவலப்பர்கள் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சீனாவில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கடந்த ஆண்டு 233 வீட்டு டெவலப்பர்கள் திவால்நிலைக்கு விண்ணப்பித்துள்ளதாக, சீனா ரியல் எஸ்டேட் சங்கத்தை மேற்கோள் காட்டி தைவான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையின் படி, ” ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து 36 வழக்குகளுடன் உட்பட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விண்ணப்பங்களில் 15.45 சதவீதமாகும்.
இதில் ஹுனான் மாகாணம் 2வது இடத்திலும், குவாங்டாங் மாகாணம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான திவால்களின் எண்ணிக்கை 2020 க்குப் பிறகு மிகக் குறைவு என்று அறிக்கை கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில் 408 வீட்டு டெவலப்பர்கள் திவால்நிலைக்குத் தாக்கல் செய்தனர், 2021 ஆம் ஆண்டு 343, மற்றும் 2022 ஆம் 308 ஆகா குறைந்தது.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மூன்று மற்றும் நான்கு அடுக்கு வீடுகளை கொண்டுள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவைத் தளமாகக் கொண்ட CRIC செக்யூரிட்டிஸ் ஆராய்ச்சித் துறை, 2023 ஆம் ஆண்டில் சீனாவில் வீட்டு விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், 2024 ஆம் ஆண்டும் இது தொடரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது