அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற சிறுவன் கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப்பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற 11 வயது சிறுவன் ரூபிக் கன சதுரத்தை பயன்படுத்தி கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் என்ற சிறுவன் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று வருகிறது. சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், நம்ப முடியவில்லை! என்ன ஒரு அசாத்திய திறமை உங்களிடம் உள்ளது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் என்ன ஆச்சரியம், ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் ஹிருதய் படேலின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.