இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்கியதில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் இந்தியா 436 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 420 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஒல்லி போப் 21 பௌண்டரீஸ் என அதிகபட்சமாக 196 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் இவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும், அக்சார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 39 ரன்களும், பரத் மற்றும் அஸ்வின் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
ராகுல் 22 ரன்களும், அக்சார் 17 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் டாம் 7 விக்கெட்களை எடுத்தார்.
ஜோ ரூட் மற்றும் ஜாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.