ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கத்துவாவின் ஹிராநகரில் சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விவசாய கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,
குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் பதேர்வாவின் லாவெண்டர் பண்ணைகளை சமீபத்தில் சித்தரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நறுமண இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் தற்போது லாவெண்டர் சாகுபடியை தொடங்கியுள்ளன என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் விவசாயத் துறையின் வெற்றிக் கதையை பிரதமர் நரேந்திர மோடி தனது “மனதின் குரல்” ஒலிபரப்பில் விரிவாக விளக்கியதை நினைவு கூர்ந்தார். அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நறுமண இயக்கம் என்ற பெயரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட பதேர்வா என்ற சிறிய நகரத்தைப் பற்றி நேயர்களிடம் பிரதமர் எடுத்துரைத்ததைப் பற்றியும் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு மாற்று ஆதாரத்தை வழங்குகிறது என்று கூறினார்.
பதேர்வாவைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட செழிப்பான லாவெண்டர் தொழில்முனைவோர் , விவசாயத்தின் மூலம் ஸ்டார்ட்அப் செய்வதற்கான ஒரு புதிய மற்றும் இலாபகரமான வழியை இளைஞர்களுக்கு காட்டியுள்ளனர், இது இந்த நாட்டின் பிரத்யேக களமாகும், மேலும் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டல் பங்களிப்பு செய்யும் மற்றும் 2047 க்குள் பிரதமர் மோடியின் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற கண்ணோட்டத்தை நனவாக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது அல்லது லாவெண்டர் பொருட்களுக்கான தொழில்துறை இணைப்புகளை உறுதி செய்வது அல்லது தேவையான பிற உதவிகளை வழங்குவது என சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான அரசின் நடவடிக்கைகளால் இது எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.