19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய நேற்றையப் போட்டியில் இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 8 பௌண்டரீஸ், 3 சிக்சர்கள் உட்பட 118 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் மற்றொரு வீரரான முஷீர் கான் 6 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 76 பந்துகளில் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் கேப்டன் உதய் 35 ரன்களும், அடர் சிங் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பிரியன்ஷு மோலியா 27 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது. அமெரிக்காவில் அதிகபட்சமாக சுப்ரமணியன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
ரிஷி ரமேஷ், ஆரின் சுஷில், ஆர்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் அமெரிக்காவுக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா அணியில் அதிகபச்சமாக ஸ்ரீவஸ்தவா 40 ரன்களும், ஆர்யா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அமோக் ரெட்டி 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ராஜ், பாண்டே, அபிஷேக், பிரியன்ஷு மோலியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 108 ரன்களை அடித்த இந்திய வீரர் அர்ஷின் குல்கர்னிக்கு வழங்கப்பட்டது.