AI மூலம் உருவாக்கப்பட்ட பிரபலங்களின் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் படங்களின் சமீபத்திய அதிகரிப்பு குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா வருத்தம் தெரிவித்தார்.
தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பிரபல பாப் பாடகி டெயிலர் ஸ்விஃப்ட் டீப்ஃபேக் போஸ்கள் மற்றும் படங்கள் மூலம் பகிரப்பட்டது. இது டெயிலர் ஸ்விப்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற போலி நிர்வாணப் படங்கள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து டெயிலர் ஸ்விஃப்ட் “கோபமடைந்தார்” என்றும், புகைப்படங்களை உருவாக்கியதற்கு காரணமான தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் X இல் பகிரப்பட்டன, அதன் தளத்திலிருந்து அகற்றப்பட்டது. பின்னர், X இல் டெயிலர் ஸ்விப்ட்டின் பெயரைத் தேடும்போது error ஏற்பட்டது.
இந்நிலையில், பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் போலி ஆபாசப் படங்கள் குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது ?
அப்போது அவர், இது போன்ற சம்பவங்களுக்கு விரைவான பதிலடி கொடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். “இதை நாம் வேகமாகச் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பான உள்ளடக்கம் மட்டுமே ஆன்லைனில் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய “காவலர்கள்” தேவை என்றும் கூறினார்.
மேலும் நான் இரண்டு விஷயங்களை கூறுகிறேன் : ஒன்று , இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நாம் அணைத்து தொழில்நுட்பத்திற்கும் ஆபத்தை தடுக்கும் தடுப்பு அமைப்பதை கடமையாக கொண்டிருக்கவேண்டும் . சில நெறிமுறைகளை ஒன்றிணைத்தல். எங்களால் செய்ய முடியும் – குறிப்பாக உங்களிடம் சட்டம் மற்றும் சட்ட அமலாக்கம் மற்றும் தொழில்நுட்ப தளங்கள் இணைந்திருந்தால் – நாம் நினைப்பதை விட அதிகமாக செய்ய முடியும் என்று கூறினார்.
மைக்ரோசாஃப்ட் டிசைனர் இமேஜ் ஜெனரேட்டரைப் பயன்படுத்தி படங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்படுகிறது.
மேலும் “எங்கள் குழுக்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்து படங்களையும் தீவிரமாக அகற்றி, அவற்றை வைத்திருக்கும் கணக்குகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் மீறல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தீர்க்கப்படுவதையும், உள்ளடக்கம் அகற்றப்படுவதையும் உறுதிசெய்ய, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று X-நிறுவனம் தெரிவித்துள்ளது.