பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவர் நதி ஒடின்சன் தாய்லாந்தில் 29வது மாடியிலிருந்து குதித்தபோது பாராசூட் விரியாததால் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த 33 வயதான பிரபல ஸ்கை டைவர் தான் நதி ஒடின்சன். இவர் கடந்த 27ஆம் தேதி தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்தார்.
அப்போது, அவர் பாராசூட்டை விரிக்க முயற்சி செய்தார், ஆனால், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவில்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த அவர் தரையில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பேசிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள், “ஏதே தரையில் விழுந்தது போன்றும் , பலத்த சப்தமும் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரியவந்தது” எனக் கூறினார்.
நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக தாய்லாந்து போலீஸார் தெரிவித்தனர்.
இவர் ‘Nathy’s Sky Photography’ என்ற முகநூல் பக்கம் வைத்துள்ளார். இது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.