பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அதிகமான இளையர்கள் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.
அந்நாட்டில் 11 வயதிலிருந்து 17 வயதுடைய இளையர்களில் 7.6 விழுக்காட்டினர் அடிக்கடி மின்-சிகரெட்டைப் புகைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. முன்னதாக 2020ஆம் ஆண்டில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.
பிரிட்டனில் மின்-சிகரெட்டுகளை விற்பது சட்டவிரோதம். ஆனால் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் இளையர்களை அதிகம் ஈர்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.
அத்தகைய மின்-சிகரெட்டுகள் இன்னும் சிறிய பொட்டலங்களில் வண்ணமயமான தோற்றத்தில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் அதிக இளைஞர்கள் இதை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆகையால் அந்நாட்டு அரசு இந்த பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் தடை செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தடை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.