எகிப்து சிறுமி, தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான “தேஷ் ரங்கீலா” பாடலைப் பாடியதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
This rendition by Kariman from Egypt is melodious! I congratulate her for this effort and wish her the very best for her future endeavours. https://t.co/I1mbVZuG8c
— Narendra Modi (@narendramodi) January 29, 2024
“எகிப்தைச் சேர்ந்த கரிமனின் இந்தப் பாடல் இனிமையானது! இந்த முயற்சிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.