இந்திய வீரர் பும்ராவுக்கு ஐசிசி விதிமுறையில் லெவல் ஒன்றை மீறியதாக அவருக்கு நன்னடத்தை குறைபாடுக்கான புள்ளி வழங்கப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்கியதில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் இந்தியா 436 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 420 ரன்களை எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தில் 81-வது ஓவரை பும்ரா வீச வந்தார்.
அந்த ஓவரில் ஒல்லி போப் ரன்களை எடுப்பதற்காக ஓடியபோது வேண்டுமென்றே அவரது பாதையில் பும்ரா குறுக்கிட்டார். ஒல்லி போப்பை சீண்டும் வகையில் நடந்துகொண்ட பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐசிசி விதிமுறையில் லெவல் ஒன்றை மீறியதாக அவருக்கு நன்னடத்தை குறைபாடுக்கான புள்ளியும் வழங்கப்பட்டது.