பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ் ஜெரைஸ் என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற பகுதியில் இருந்து ஒரு சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சிறிய ரக விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்றது. அப்பகுதியில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்யைம் இழந்தது.
இந்த விமானம் இட்டாபேவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய ரக விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து விமானத்தில் இருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான பகுதியில், இறந்த 7 பேரின் உடல்களையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.