சிலிண்டர் டெலிவரி செய்யும் கிரிக்கெட் வீரரின் தந்தை: வைரலாகும் வீடியோ!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலிண்டர் டெலிவரி செய்யும் கிரிக்கெட் வீரரின் தந்தை: வைரலாகும் வீடியோ!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங், இப்போதும் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலையை தொடர்ந்து வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் பினிஷெர் என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் முதலில் ஞாபகம் வருவது தோனி தான். தற்போது அவருக்கு இணையாக ஒரு பினிஷெர் உருவாகி வருகிறார். அவர் தான் ரிங்கு சிங்.

இவர் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், ரிங்கு சிங்கின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.

உடனடியாக இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்ட ரிங்கு சிங், இந்திய அணியின் ஃபினிஷராக உருவெடுத்தார்.

அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் அவரை இந்திய அணியின் நிரந்தர வீரராக மாற்றியது.

அதிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவுடன் இணைந்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பலருக்கும் வியப்பை அளித்தது.

இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 89.0 பேட்டிங் சராசரியுடன் 2 அரைசதம் உட்பட 356 ரன்களை குவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்திய அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரர் ரிங்கு சிங்கை இந்தியாவின் புதிய தோனி என்று பாராட்டி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிங்கு சிங், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங், இப்போதும் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலையை தொடர்ந்து வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏழ்மையான பின்னணியை கொண்ட ரிங்கு சிங், உச்சத்திற்கு வந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை, ஆட்டோ ஓட்டும் சகோதரர் என்று ரிங்கு சிங்கின் குடும்ப பின்னணி சாதாரணமானது.

கிரிக்கெட் போட்டியில் ஒருமுறை பைக் ஒன்றை பரிசாக வென்று ரிங்கு சிங் அதனை வீட்டிற்கு கொண்டு சென்ற போது, அதனை நிறுத்துவதற்கு கூட இடமில்லாத அளவிற்கு அவர் வீட்டின் சூழல் இருந்தது.

இதன்பின் குடும்பத்தின் பொருளாதார சூழல் ரிங்கு சிங்கின் வளர்ச்சியின் மூலம் சரி செய்யப்பட்டது. இருப்பினும் ரிங்கு சிங்கின் தந்தை தொடர்ந்து சிலிண்டர் டெலிவரியில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து ரிங்கு சிங் பேசுகையில், என் தந்தையிடம் ஓய்வெடுக்கலாம் என்று அறிவுறுத்தினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். அவரின் எண்ணங்களையும் புரிந்து கொள்கிறேன்.

வாழ்க்கை முழுக்க பணியாற்றிவிட்டு திடீரென ஓய்வெடுப்பது அவருக்கு சரியாக இல்லை. அதனால் அவர் பணியாற்றுவதை தடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதிகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags: CricketRinku Singh
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Next Post

சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சத்னம் சிங் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies