1987 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடர் தற்போது மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ‘ராமாயணம்’ தொடர், 1987-ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமராகவும், நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர், சுனில் லஹ்ரி லட்சுமனனாகவும் நடித்திருந்தனர்.
அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரைப் பார்த்தனர் மக்களிடையே இந்த தொடர் பெறும் வரவேற்பை பெற்றது. 1987 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 1988 ஆம் ஆண்டு முடிந்தது,
அதன்பிறகு கொரோனா தொற்று காலத்தின் போது, வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ‘ராமாயணம்’ தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது.
கொரோனா காலத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ‘ராமாயணம்’ தொடர் படைத்துள்ளதாக தூர்தர்ஷன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ராமாயணம் தொடர் மீண்டும் தூர்தர்ஷன் (டிடி) நேஷனலில் விரைவில் ஒளிபரப்படும் என்று அதிகாரப்பூர்வாமாக தூர்தர்ஷன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
आ गए हैं प्रभु श्री राम! एक बार फिर वापस आ गया है पूरे भारत का सबसे लोकप्रिय शो 'रामायण'। रामानंद सागर की रामायण एक बार फिर #DDNational पर, जल्द देखिए!#Ramayan | @arungovil12 | @ChikhliaDipika | @LahriSunil pic.twitter.com/O5mi0FJfgU
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) January 31, 2024