சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு பிப்.1-ம் தேதி முதல், விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1,000 பயண அட்டை உள்ளிட்ட, மாதாந்திர சலுகை அட்டை கிடைக்கும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ளது கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையம். இந்த நிலையம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் உள்ளிட்டவை தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
மேலும், தனியார் சொகுசு பேருந்துகளும், அதாவது ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கிறது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல், பயணிகளுக்கு விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1,000 பயண அட்டை, உள்ளிட்ட பல்வேறு பயண சலுகை அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து அறிவித்துள்ளது. இதற்காக, அங்கு மாதாந்திர சலுகை விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு, மாதாந்திர பயணச்சீட்டுகள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் மற்றும் வெகு தொலைவில் இருந்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்னை மாநகருக்கு வருகை தருபவர்களுக்கு, மாதாந்திர பயணச்சீட்டு சலுகை அட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.