தகுதி படைத்த ஒருவரின் சம்பளம் மற்றும் தேவையின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அட்டைகளைப் பயன்படுத்திவிட்டு, குறிப்பிட்ட தேதிக்குள் அந்த தொகையைச் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்த தொகைக்கு வங்கிகள் வட்டி வசூல் செய்கிறது.
இந்தியாவில் அரசு வழங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் நாடு முழுவதும் 10 கோடிக்கு மேல் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பேங்க் ஆஃப் பரோட்டா வங்கியின் கிரெடிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விதி பிப்ரவரி 1 -ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
காசோலை செலுத்துவதற்கான புதிய விதிகளையும் பேங்க் ஆஃப் பரோட்டா வங்கி அமல்படுத்தது. பிப்ரவரி 1 -ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் நேர்மறை பேமெண்ட் முறையைப் பின்பற்றுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.
புதிய விதிகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.