நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 படத்தின் படப்பிடிப்பு காரணாமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
தற்போது இவர் D51 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படம் அரசியல் கதைகளத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படபிடிப்பால் பொதுமக்கள் பலர் அவதியடையதாக வந்தனர்.
இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு, அலிபிரி அருகே நடந்து வருகிறது. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள், தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனால் மிகவும் குறுகலான ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலையில்’ கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சிறுவர்கள், வயதானோர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் தனுஷின் படபிடிப்புக்கு மக்கள் தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பை நிறுத்த கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்க்கப்பட்டது. புகாரை தொடர்ந்து படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை திருப்பதி மாநகர காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.