காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனால், இக்கோவிலைச் சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 11 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, கோவில் அருகாமையில் உள்ள 11 பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.