அடுத்த 48 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி சந்தீப் குமார் ஷர்மா கூறியதாவது, பிப்ரவரி 3-ஆம் தேதிக்குப் பிறகு பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பரவலாக மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி வரை, அதிகபட்ச பனிப்பொழிவு உதய்பூரில் 26 செமீ மற்றும் கீலாங்கில் 8 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
சிம்லா மாவட்டத்தில் 15 முதல் 20 செ.மீ வரையிலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருந்தது.
வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் உள்ளது. இன்றும், நாளையும், மழை மற்றும் பனிப்பொழிவு தொடரும். சம்பா, குலு, கின்னவுர், மாண்டி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக, 4 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 130 சாலைகள் மூடப்பட்டுள்ளன.