நாட்டின் கடல்சார் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக சாகர் சேது திட்டத்தின் மூலம் மாற்றியமைக்கும் வகையில், கடல்சார் ஒற்றைசாளர வசதி மற்றும் கடல்சார் வர்த்தகத்துறை பிரிவுகளை மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைக்கிறார்.
சாகர் சேது தளத்தில் இந்த இரண்டு அதிநவீன டிஜிட்டல் திட்டங்கள் கடல்சார் நடவடிக்கைகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டும் வகையில், இந்த தொடக்க விழா நடைபெற உள்ளது.
சாகர் சேது (என்.எல்.பி-எம்) தளத்தில் இந்த ஒற்றை சாளர வசதி அரசு அதிகாரிகள், துறைமுக பணியாளர்கள் மற்றும் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களிடையே அது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை மின்னணு வாயிலாக சமர்ப்பித்தல், அதன் செயலாக்கம் மற்றும் பரிமாற்றங்களுக்கு உதவிடுகிறது. இத்திட்டம் கப்பல் தலைமை இயக்குநரகம், கடல்சார் முகவர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து பெரிய துறைமுகங்களின் துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
சாகர் சேது (என்.எல்.பி-எம்) திட்டத்தில் உள்ள கடல்சார் வர்த்தக (எம்.எம்.டி) தொகுதி, துறைமுகங்களில் கப்பல்களை நிறுத்தி வைப்பது மற்றும் விடுவிப்பது தொடர்பான தகவல்களை வழங்கும் டிஜிட்டல் தளமாகும். வர்த்தக ரீதியிலான கப்பல் போக்குவரத்து ஆய்வுகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இது உதவிடும்.
எதிர்காலத்திற்கு ஏற்றவகையில், கடல்சார் நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வரும் விரிவான டிஜிட்டல் அடிப்படையிலான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.